சொல் பொருள்
ஒரு நீர்ப்பறவை
சொல் பொருள் விளக்கம்
வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும்,
முதுகுப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட பறவை இது. இது “உள்ளான் குருகு’ எனவும் வழங்கப்படும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a water bird, little egret
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 151/1,2 வெள்ளாங்குருகின் குஞ்சு இறந்ததாக அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே துறை போகு அறுவை தூ மடி அன்ன நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே – நற் 70/1-3 சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே! சலவைத்துறையில் மிதக்கும் வெள்ளை ஆடையின் தூய மடிப்பு போன்ற நிறம் விளங்கிய சிறகினை உடைய சிறிய வெள்ளைக் குருகே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்