சொல் பொருள்
விளாம்பழம், பாடை
சொல் பொருள் விளக்கம்
விளாம்பழம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
woodapple fruit, bier
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா – திரு 37 விளவின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்துக்கொண்டு, வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை – நற் 24/5 விளாம்பழங்களையே உணவாகக் கொண்ட வேற்று நாட்டு அரிய வழியில் மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் – புறம் 181/1 மன்றத்தின்கண்ணே நிற்கப்பட்ட விளாவினது மனையிடத்து வீழ்ந்த விளாம்பழத்தை கள்ளி போகிய களரி மருங்கில் வெள்ளில் நிறுத்த பின்றை – புறம் 360/16,17 கள்ளிகள் ஓங்கியுள்ள பிணம்சுடு களத்தின்கண் பாடையை நிறுத்திய பின்பு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்