சொல் பொருள்
வேள் – யாகம்செய் என்பதன் இறந்தகால வினையெச்சம்,
வேள் – விரும்பு என்பதன் இறந்தகால வினையெச்சம்,
சொல் பொருள் விளக்கம்
வேள் – யாகம்செய் என்பதன் இறந்தகால வினையெச்சம்,
வேள் – விரும்பு என்பதன் இறந்தகால வினையெச்சம்,
வேட்டையை மேற்கொண்ட
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
past verbal participle for the verb – offer sacrifices
past verbal participle for the verb – long for
hunting (dog)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரசு பட அமர் உழக்கி முரசு கொண்டு களம் வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே – மது 128-130 அரசர்கள் விழும்படி போர்செய்து, முரசைக்கொண்டு களவேள்வி செய்த கொல்லுகின்ற ஆற்றல் மிக்க உயர்ந்த புகழையுடைய வேந்தனே புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர் – புறம் 177/8 புளிச்சுவையை விரும்பிய சிவந்த கண்ணையுடைய ஆண்மக்கள் வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில் – குறு 56/1 வேட்டையை மேற்கொண்ட செந்நாய் தோணி உண்டு எஞ்சியதாகிய வேட்டம் – வேட்டை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்