Skip to content

சொல் பொருள்

விரும்பி, வேள் – விரும்பு என்பதன் அடியாகப் பிறந்த இறந்த கால வினையெச்சம், வேட்டையாடுதற்கு, வேள்விசெய்யத்(தீ)மூட்டி, வேட்டுவரின், வேட்டையின், வேட்டுவர்

சொல் பொருள் விளக்கம்

விரும்பி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

verbal past participle for the verb desire, like, to hunt, make fire to perform rituals, of the Hunters, of the Hunting, hunters

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி – பட் 234,235

புதர்கள் படர்ந்த பாறைக்குன்றுகள் போல, போரை விரும்பி,
(சிறுபூளை,பெரும்பூளையாகிய)பலவாகிய பூளைகளோடே, உழிஞையைச் சூடி,
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு – பெரும் 43
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு – பெரும் 449

முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் – நற் 252/10

முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின்

கடும் தெறல் செம் தீ வேட்டு
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே – புறம் 251/6,7

மிக்க வெம்மையையுடைய செந்தீயை மூட்டி
முதுகின்கண்ணே தாழ்ந்த புரிந்த சடையைப் புலர்த்துவோன்

வேட்டு புழை அருப்பம் மாட்டி – முல் 26

வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து

வேட்டு வலம் படுத்த உவகையன் – நற் 285/6

வேட்டையிலே தான் பெற்ற வென்றியாலாய உவகையுடையவனாகி

ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின்
நாய் பயிர் குறிநிலை கொண்ட கோடே – அகம் 318/13-15

சிறிது ஊதுதல் வேண்டும், வேட்டுவர்களோடு
மூங்கில் மிக்க காட்டில் பிரிந்த உனது
நாய்களை அழைக்கும் குறிப்பினைக் கொண்டுள்ள ஊதுகொம்பை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *