வேளை என்பது ஒரு சிறு செடி
1. சொல் பொருள்
நிலவேளை, நல்வேளை, தைவேளை
2. சொல் பொருள் விளக்கம்
இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரமானது நல்வேளை, அசகண்டர் ஆகிய பெயர்களைக் கொண்டது. இதன் மலர்கள் பகல் வேளையில் சிறிது தலை குனிந்திருக்கும், மாலை வேளையில் பிரகாசமாக மலர்ந்து சிரிக்கும். இதை வைத்து முற்காலத்தில் மாலை வேளையை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்பதால், ‘வேளை’ என்ற பெயர் உருவாகியிருக்கிறது.
பசியைத் தீர்த்துக்கொள்ளும் உணவாக வேளைக்கீரை உபயோகத்தில் இருந்திருக்கிறது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Gynandropsis pentaphylla, Cleome gynandra
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137 உப்பில்லாமல் வேகவைத்த குப்பைக்கீரையை – குப்பையினின்ற வேளைக்கீரை உப்புமின்றி வெந்ததனை – பொ.வே.சோ.உரை விளக்கம் இது ஏழை எளியோரின் உணவாக இருந்தது. இதன் பூ வெண்மையாக இருக்கும். வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த குப்பை வேளை உப்பு இலி வெந்ததை மடவோர் காட்சி நாணி கடை அடைத்து இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் அழி பசி வருத்தம் வீட – சிறு 136-140 வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை, புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து, கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும், அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு; கவை கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் தாது எரு மறுகில் போதொடு பொதுளிய வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை – புறம் 215/1-4 கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும் தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த வேளையினது வெள்ளிய பூவை வெள்ளிய தயிரின்கண் பெய்து இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும் – வேளைப்பூவை உப்பிட்டு வேகவைத்து வெள்ளிய தயிர் கலந்து நன்கு பிசைந்து மிளகுத்தூளிட்டுத் தாளிதம் செய்யப்பட்ட புளிங்கூழ் ஈண்டு அம்புளி மிதவை எனப்பட்டது – ஔவை.சு.து.விளக்கம் கைம்பெண்கள் உண்ணும் எளிய உணவாக இருந்தது. அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் வெள் எள் சாந்தொடு புளி பெய்து அட்ட வேளை வெந்ததை வல்சி ஆக – புறம் 246/6-8 இலையிடையே பயின்ற கையால் பிழிந்துகொள்ளப்பட்ட நீர்ச்சோற்றுத் திரளுடனே வெள்ளிய எள் அரைத்த விழுதுடனே புளி கூட்டி அடப்பட்ட வேளை இலை வெந்த வேவையுமாகிய இவை உணவாகக் கொண்டு காட்டில் மான்கள் கொறித்துத் தின்னும். சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை வேளை வெண் பூ கறிக்கும் – புறம் 23/19-21 சிறிய மறியை அணைத்துக்கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய மான்பிணை பூளை ஓங்கிய அஞ்சத்தக்க பாழிடத்து வேளையினது வெளிய பூவைத் தின்னும் குப்பை வேளை உப்பு இலி வெந்ததை - சிறு 137 கேள் இனி வேளை நீ முன்னிய திசையே - மலை 94 வேளை வெண் பூ கறிக்கும் - புறம் 23/21 வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ - புறம் 215/3 வேளை வெந்ததை வல்சி ஆக - புறம் 246/8 வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்து - பதி 15/9 வெண் பூ வேளையொடு சுரை தலைமயக்கிய - பதி 90/29 இன்னவை மகளும் தாயும் இணை என நடத்தும் வேளை பல் நவை அறும் தன் பூமான் பழங்கதை உரைத்து உரைத்த - தேம்பா:0 11/1,2
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்_பெருமான் அடி - தேவா-சம்:1547/3 பொடியர் பூம் கணை வேளை செற்றவர் - தேவா-சம்:1767/2 கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும் - தேவா-சம்:2175/2 பூம் கணை வேளை பொடியாய் விழ விழித்தோன் புலியூர் - திருக்கோ:179/1 ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம் - திருமந்:1365/1,2 மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏற தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட - நாலாயி:1503/3 கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே - திருப்:216/3 கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய - திருப்:242/5,6 சுரிய குழல் குறமகளை வேளை காத்து அணை பெருமாளே - திருப்:415/16 வேளை சீறி தூங்கலொடே வயமாவை தோலை சேர்ந்து அணிவார் இட - திருப்:498/11 ஆதரித்து வேளை புக்க ஆறு இரட்டி புய நேய - திருப்:544/3 கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான் - திருப்:648/4 வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள் - திருப்:727/3 ஆயாள் தாள் மேல் வீழா வாழா ஆளா வேளை புகுவேனோ - திருப்:818/6 வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி - திருப்:970/2 வேளை கொண்ட பிரானே வானவர் பெருமாளே - திருப்:997/16 மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி - திருப்:1000/2 வேடை மயலுற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா - திருப்:1026/7 காலகால ப்ரபு சாலும் மாலுற்று உமைக்காக வேளை புக கழுநீரால் - திருப்:1105/7 சச்சிலுற்று படியில் விட்டுவிட்டு குளறி சத்துவத்தை பிரியவிடும் வேளை - திருப்:1114/2 வாரா உலாவி உணரும் யோகம் குலைய வீக்கிய வேளை கோபித்து ஏற பார்த்து அருளிய பார்வை - திருப்:1150/10 கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை - திருப்:1173/13 வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே - திருப்:1180/16 வேளை என புக்கு நிற்கும் வித்தக இளையோனே - திருப்:1187/14 கோல பெண் வாகு கண்டு மாலுற்ற வேளை கூடிக்குலாவும் அண்டர் பெருமாளே - திருப்:1242/8 கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத - திருப்:1246/6 இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் - திருப்:1267/5 வேளை தனக்கு உசிதமாக வேழம் அழைத்த பெருமாளே - திருப்:1294/4 வாடை பற்று வேளை அடாஅடா என நீ மயக்கம் ஏது சொலாய்சொலாய் என - திருப்:1315/7 விள்ள அரும் பசியால் மீளும் வேளை இ பிணையை நோக்கி - சீறா:2093/3 சேர்த்து உகுபான் கண் துயில்தரும் வேளை சிறு செவி பெரிய வாய் தீ கண் - சீறா:2879/2 முருக்கும் வேளை உக்காச கை ஆயுதம் முறிந்து - சீறா:3508/2 இனையன போர்செய் வேளை எண்ணலர்க்கு இடியேறு அன்னார் - சீறா:3938/1 மள்ளர் செறிய வரும் வேளை முன்னர் வலிதின் விதி பிடித்து - சீறா:4047/3 முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை பற்பல காபிர் தொக்க பாசறை வீட்டினின்று - சீறா:4873/2,3 வேளை ஏறிய அரும் படை தலைவரும் மேல் வரும் புனலூடு - வில்லி:11 74/3 கன்னல் வேளை வென்ற இ கவின் படைத்த காட்சியும் - வில்லி:13 120/1 வேளை புக்கவரினும் வீழ்ந்து வேண்டினான் - வில்லி:41 248/4 கொள்ளும் எனை பல கோலம் மென்மேல் கொண்டிட வேளையும் மீதூர - கலிங்:515/1 வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து - முத்தொள்:23/1 வேளை வென்ற முகத்தியர் வெம் முலை - பால:2 24/1 வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் - யுத்2:17 11/2,3 வெம் கானகம் திரியும் வேளைதனில் அங்கே ஓர் - நள:269/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்