சொல் பொருள்
நாள்தோறும், எப்பொழுதும்
சொல் பொருள் விளக்கம்
நாள்தோறும்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
everyday, daily, all the time
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வைகலும் பொருந்தல் ஒல்லா கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே – நற் 98/11,12 நாள்தோறும் உன் வரவை எண்ணிக் கண்ணிமைகள் ஒட்டாத கண்களும், உன்னோடு சென்றுவிட்டுத் திரும்பி வராத என் அன்பற்ற நெஞ்சமும் – இள மழை ஆடும் இள மழை ஆடும் இள மழை வைகலும் ஆடும் என் முன்கை வளை நெகிழ வாராதோன் குன்று – கலி 41/25-27 “இளம் மேகங்கள் உலவிக்கொண்டிருக்கும்! இளம் மேகங்கள் உலவிக்கொண்டிருக்கும்! இளம் மேகங்கள் எப்போதும் உலவிக்கொண்டிருக்கும்! என் முன்கையிலுள்ள வளையல்கள் கழன்று விழும் வேளையிலும் வராமலிருப்பவனின் குன்றில்!”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்