Skip to content

சொல் பொருள்

ஊர், செல்வம், நிலம்,

சொல் பொருள் விளக்கம்

 செல்வம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

city, treasure-trove, land

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் – அகம் 21/14

வெப்பம் நின்று காயும் புல்லிய இடங்களில் உள்ள ஊர்களையுடைய

மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே – குறு 71/1

என் காம நோய்க்கு மருந்து வேண்டும் எனின் அது அவளே; எனக்குச் செல்வமும் அவளே

வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகல்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்கு உதவாதே – புறம் 18/24-26

விதைத்தபின் மழையைப் பார்த்திருக்கும் புல்லிய நிலம், இடம் அகன்ற
நிலத்தையுடைத்தாயினும் அது பொருந்தி ஆளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *