Skip to content

admin

விப்பு வெடிப்பு

சொல் பொருள் விப்பு – நீர் இல்லாமையால் நிலத்தில் விழும் விரிவு.வெடிப்பு – மண் கல் முதலியவை பிளந்து காணல். சொல் பொருள் விளக்கம் விப்பு, வெடிப்பு என்பவை இரண்டும் பிளந்தவையே. ஆனால் ‘விப்பு’… Read More »விப்பு வெடிப்பு

விட்டக் குறை தொட்டக்குறை

சொல் பொருள் விட்டக்குறை – முன்னைப் பிறவியில் செய்யாமல் விட்ட குறைவினை.தொட்டக்குறை- இப்பிறவியில் எடுத்து முடிக்காமல் விட்ட குறைவினை. சொல் பொருள் விளக்கம் ஒருவன் பிறவியைத் தீர்மானிப்பது ‘விட்டக் குறை தொட்டக்குறை’ என்பது இந்திய… Read More »விட்டக் குறை தொட்டக்குறை

வாலும் தோலும்

சொல் பொருள் வால் – கமலை வடத்தொடு கூடிய கயிறு அல்லது வால் கயிறு.தோல் – வால்கயிற்றுடன் கூடிய தோல் அல்லது வால் தோல் சொல் பொருள் விளக்கம் வால் முன்னே வரும்; தோல்… Read More »வாலும் தோலும்

வாடல் வதவல்

சொல் பொருள் வாடல் – வாடிப் போனவை.வதவல் – காய்ந்தும் காயாதும் இருப்பவை. சொல் பொருள் விளக்கம் இலை, காய், கனி முதலிய நீர்ப்பதப் பொருள்கள் வெப்பத்தாலும் வெப்பக் காற்றாலும் வாட்டமுறும். வாட்டமுற்றவை வாடலாம்.… Read More »வாடல் வதவல்

வாட்ட சாட்டம்

சொல் பொருள் வாட்டம் – வளமான உயரம்.சாட்டம் – வளமான கனம். சொல் பொருள் விளக்கம் வாட்டம்-வளம், வாளிப்பு எனவும் வழங்கும். வளமான உடல், வாளிப்பான தோற்றம் என்பர். சட்டம் என்பதும் சட்டகம் என்பதும்… Read More »வாட்ட சாட்டம்

வன்பு துன்பு(வம்பு தும்பு)

சொல் பொருள் வன்பு – வல்லாண்மையால் துயரூட்டல்.துன்பு – வல்லாண்மையின்றியும் சொல்லாலும் கரவாலும் துயரூட்டல். சொல் பொருள் விளக்கம் “வன்பு துன்புக்குப் போகாதே; வன்பு துன்புகளில் மாட்டிக் கொள்ளாதே” என்பவை அறிவுரைகளாம். வன்படியாக என்பது… Read More »வன்பு துன்பு(வம்பு தும்பு)

வம்மை வழமை

சொல் பொருள் வம்மை(வண்மை) – கொடைவழமை – வழக்கம் சொல் பொருள் விளக்கம் வழி வழியாகக் கொடுத்து வந்த கொடை முறை ‘வம்மை’ என்பதாம். உழவர் குடியில் இவரிவர்க்கு இன்ன இன்ன செய்ய வேண்டும்… Read More »வம்மை வழமை

வதியும் சேறும்

சொல் பொருள் வதி – வழியிலும் வாழ்விடங்களிலும் பட்ட சேறு, வதி எனப்படும்.சேறு – நிலங்களில் நீரோடு கலந்து கட்டியாக இருக்கும் மண்சேறு எனப்படும். சொல் பொருள் விளக்கம் வதி-வழி; வதிவிடம், நிலத்துச் சேறு… Read More »வதியும் சேறும்

வத்தல் வதக்கல்

சொல் பொருள் வத்தல்(வற்றல்)- வற்றி உலர்ந்து போனது வத்தல். (வற்றல்)வதக்கல் – சற்றே வற்றி சற்றே ஈரப்பதம் உடையது வதக்கல். சொல் பொருள் விளக்கம் உலரப் போட்ட மிளகாடீநு வற்றல் நன்றாக உலர்ந்தும் உலரமாலும்… Read More »வத்தல் வதக்கல்

வட்டி வாசி

சொல் பொருள் வட்டி – குறித்த தொகையைக் குறித்த காலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஈடாகத் தரும் தொகை வட்டி.வாசி – வட்டித் தொகை அதற்குரிய கெடுவைத் தாண்டிக் கொடுக்கப்படுமானால் அத்தொகைக்குரிய வட்டித் தொகை வாசி.… Read More »வட்டி வாசி