Skip to content

admin

பத்தடப்பு

சொல் பொருள் பத்து அடப்பு என்பவை பற்று அடைப்பு என்பதாம். ஒன்றோடு ஒன்றைப் பொருத்தி வைப்பது பற்ற வைப்பது ஆகும் சொல் பொருள் விளக்கம் பிரிந்து போன இருவரை அல்லது இரு கூட்டங்களை இணைத்து… Read More »பத்தடப்பு

பண்டுவர்

சொல் பொருள் மருத்துவர் சொல் பொருள் விளக்கம் பண்டுவம், பண்டுவர் என்னும் சொற்களை மிகுதியாக ஆட்சிக்குக் கொண்டு வந்தார் பாவாணர். பண்டுவர் என்பது மருத்துவர் எனவும், பண்டுவம் என்பது மருத்துவம் எனவும் பொருள் கொண்டு… Read More »பண்டுவர்

பண்டடை

சொல் பொருள் பண்டத்தை உள்வைத்து வெயில் மழையால் கேடு வராமல் பல திங்களுக்குக் காப்பதற்கு அமைப்பது பண்டடையாகும் சொல் பொருள் விளக்கம் பண்டத்தை உள்வைத்து வெயில் மழையால் கேடு வராமல் பல திங்களுக்குக் காப்பதற்கு… Read More »பண்டடை

படைக்கால்

படைக்கால்

படைக்கால் என்பது நீரோடும் படை வாய்க்கால் 1. சொல் பொருள் (பெ) 1. நீரோடும் படை வாய்க்கால், 2. கொழுவைப் பொறுத்தும் ஏர் நுனி 2. சொல் பொருள் விளக்கம் உழுவார் பாத்தி கட்டுவதற்குச் சால்… Read More »படைக்கால்

படுப்பனை

சொல் பொருள் படுக்கும் இடம் சொல் பொருள் விளக்கம் படுக்கும் இடம் என்னும் பொருளில் திட்டுவிளை வட்டாரத்தில் படுப்பனை என்னும் சொல் வழங்குகின்றது. கொள்வது கொள்வனை எனவும், கொடுப்பது கொடுப்பனை எனவும் வழங்குவது போலப்… Read More »படுப்பனை

படுசாவு

சொல் பொருள் இயல்பாக இறக்கும் இறப்பைக் குறித்து வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் படுகிடை என்பது நெடுங்காலம் படுத்துக் கிடக்க வைக்கும் நோய் ஆகும். அவ்வாறு சாவும் சாவு திடுமென்று குத்து, வெட்டு, நேர்ச்சி,… Read More »படுசாவு

படுகை

சொல் பொருள் நிலத்தில் தட்டுத் தட்டாகப் படிந்துள்ள இடங்கள் படுகையாகும் சொல் பொருள் விளக்கம் நிலத்தில் தட்டுத் தட்டாகப் படிந்துள்ள இடங்கள் படுகையாகும். படிப்படியாகப் படிவதே படிகை. படுகை என மக்கள் வழக்கில் ஆயது.… Read More »படுகை

படுக்கை

சொல் பொருள் படையல் வகை சொல் பொருள் விளக்கம் தெய்வத்திற்கு இடும் படையல் வகையுள் ஒன்றாகச் சீர்காழி வட்டாரத்தில் படுக்கை என்பது வழங்குகின்றது. படுக்கை என்பது புலால் கலவாத படையல் என்பதாம். படுக்கை பரப்பிவைத்தல்… Read More »படுக்கை

படிவால்

சொல் பொருள் ஓடை சொல் பொருள் விளக்கம் கால், வால் என்பவை நெடுமை (நீளம்) என்னும் பொருள் தரும் சொற்கள். படிவால் என்பது நீர் ஓடிச் செல்லும் ஓடுகால் ஆகிய ஓடையைக் குறிப்பதாக விளவங்கோடு… Read More »படிவால்

படிப்புரை

சொல் பொருள் ஒட்டுத் திண்ணை என்பது பொருள் சொல் பொருள் விளக்கம் படி என்பது வாயில் நுழைவில் இருப்பது. அதற்கு இருபாலும் திண்ணை அமைப்பது பெருவழக்கு. குடிசை வீடு எனினும்கூட அவ் வழக்கம் சிற்றூர்களில்… Read More »படிப்புரை