Skip to content

admin

ஊச்சுப்பிள்ளை

சொல் பொருள் சொல்லியது கேளாமல் அடம்பிடிக்கும் வளர்ந்தவர்களை ஊச்சுப் பிள்ளை என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஊச்சுப்பிள்ளை என்பது பால்குடி பிள்ளை. அதற்குப் பசி உண்டாகி விட்டால் இடம் சூழல்… Read More »ஊச்சுப்பிள்ளை

உறக்காட்டுதல்

சொல் பொருள் உறங்காமல் படுத்தும் குழந்தையை உறங்க வைத்தல் உறக்காட்டுதலாம் சொல் பொருள் விளக்கம் உறங்காமல் படுத்தும் குழந்தையை உறங்கவைத்தல் உயர்கலை. அதனைக் குறிக்கும் வகையால் உறக்காட்டுதல் என்பது தென்னக வழக்கு. தாலாட்டுதல், பாடுதல்,… Read More »உறக்காட்டுதல்

உளி

சொல் பொருள் அவனை உளி என்றால் அவனைக் கூப்பிடு என்னும் பொருளதாம். சொல் பொருள் விளக்கம் ஒருவரை நினைந்து ஆர்வத்தால் அழைப்பது விளி எனப்படுதல் பொதுவழக்கு. உள்ளி அழைக்கும் இதனை உளி என்பது விளவங்கோடு… Read More »உளி

உள்ளிங்கம்

சொல் பொருள் நாணம் தரும் செய்தி ஒன்றனைக் கேட்டுத் தலைகுனிதல் என்றும் நல்லோர் இயல்பு. இத்தகு நாணத்தை ‘உள்ளிங்கம்’ என்பது மதுரை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் இங்குதல் இஞ்சுதல் என்பவை இழுத்தல்… Read More »உள்ளிங்கம்

உழவு

சொல் பொருள் உழத்தல் என்றால் வருந்தி வேலை செய்தல் என்பது பொருள். உழவு என்ற சொல்லினும் உழத்தல் என்ற சொல்லினும் வருந்தி வேலை செய்தல் என்ற பொருளுடைய அடிவேர் இருக்கிறது உழவர் ஆயோரிடை ‘உழவு’… Read More »உழவு

உவை

சொல் பொருள் குமரி மாவட்டத்தில் உவை என்பது களையைக் குறிக்கும் வழக்குச் சொல்லாகும் உவை என்பது முன்னின்றவற்றில் சிறிது சேயவற்றை. (திருக்கோ. 223. பேரா) சொல் பொருள் விளக்கம் கள் என்பது பல என்பதன்… Read More »உவை

உவச்சர்

சொல் பொருள் குற்றாலத்துப் பகுதியில் உவச்சர் என்பார் கோயில் பூசகர் என வழங்கப்படுகிறார் சொல் பொருள் விளக்கம் உவச்சர் என்பது ஒரு குடிப்பெயராக வழங்கப்படுகிறது. உவச்சர் மேளகாரர் எனப்படுவார். கொட்டு முழுக்குவார்க்கு வழங்கும் கோயிற்கொடை… Read More »உவச்சர்

உலுப்பை

சொல் பொருள் குவியும் மொய்ப் பணத்தை உலுப்பை என்பது அறந்தாங்கி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் பலபேர் கூடி நின்று (மொய்த்து) தருவதும் எழுதுவதும் மொய் எனப்படுதல் பொது வழக்கு, ஈ மொய்த்தல்,… Read More »உலுப்பை

உருளோசு

சொல் பொருள் குமரி மாவட்ட மூக்குப் பேரி (பீரி) வட்டாரத்தார் கடிகாரத்தை உருளோசு என வழங்குவர் சொல் பொருள் விளக்கம் குமரி மாவட்ட மூக்குப் பேரி (பீரி) வட்டாரத்தார் கடிகாரத்தை உருளோசு என வழங்குவர்.… Read More »உருளோசு

உருளை

சொல் பொருள் ஆடு மாடு முதலியவை விலைமாறும் தரகர் வழக்கில் உருளை என்பது ‘பணம்’ என்னும் பொருளில் வழங்கப்படுகிறது சொல் பொருள் விளக்கம் ஆடு மாடு முதலியவை விலைமாறும் தரகர் வழக்கில் உருளை என்பது… Read More »உருளை