Skip to content

admin

பருக்கை

பொருள் பருமனாதல் சோற்றுப் பருக்கை பருக்கைக்கல் உருண்டை விளக்கம் பருத்தல் என்பது பருக்கை எனவும்படும். பருமனாதல், சோற்றுப் பருக்கை, பருக்கைக்கல், உருண்டை என்பவை பருக்கைப் பொருளன. பருக்கை என்பது சிறுகல்லே; கூழாங்கல்லே. எனினும் அது… Read More »பருக்கை

பருகல்

பொருள் பருகுதல், பருகல் என்பவை பெருவேட்கையால் நீர்குடித்தல் விளக்கம் பருகுதல், பருகல் என்பவை பெருவேட்கையால் நீர்குடித்தல்; “பருகுவன் அன்ன ஆர்வம்” என்னும் உவமையே பருகுதல் என்பதன் வேட்டைப் பெருக்கத்தை உரைக்கும். “பருகுவான் போல் நோக்குதல்”… Read More »பருகல்

பருசம்

பொருள் உயரம் விளக்கம் பரிசம் என்பது பொதுமக்களால் பருசம் எனப்படுவதும் உண்டு. விரிசம் பழம்’ என்பது விருசம் பழம்’ என்பது போன்றது அது. ஆனால், இப்பருசம் அப்பொருட்டதன்று. கிணற்றின் நீராழத்தைக் காண்பார் ஓராள் பருசம்… Read More »பருசம்

பருஞ்சு

பொருள் பருந்து விளக்கம் பருந்து என்பது ‘பருஞ்சு’ எனக் கம்பரால் ஆளப்படுகிறது. புரிந்து என்பது புரிஞ்சு எனக் கொச்சையாக வழங்கும் வழக்குப் போல்வது அது. ஆயினும் ‘பரு’ மாறிற்றில்லை. “பருஞ்சு இறை” என்பது அது… Read More »பருஞ்சு

பருத்தி

குறிப்பு: இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது பொருள் பஞ்சு விளக்கம் பருத்தலால் வந்த பெயர் பருத்தி. பருத்திரள் போல் திரள்தலும் பழுத்தலும் வெடித்தலும் பஞ்சு வாய் திறக்க வெளியேறுதலும் பிளந்து விரிந்து பன்மடங்கு பருமையாய்… Read More »பருத்தி

பருப்பம்

பொருள் பருத்தது மலைக்குப் ‘பருப்பம்’ என்னும் பெயரும் ‘பருப்பதம்’ என்னும் பெயரும் உண்டாயின விளக்கம் பருப்பம் – பருத்தது; பருப்பு + அம் = பருப்பம். அம் பெருமைப் பொருள் ஒட்டு; எ-டு; கூடு+அம்=கூடம்.பருத்த… Read More »பருப்பம்

பருப்பு

பொருள் பருப்பு என்பது பருமைப் பொருளது அவரைப்பயற்றின் பருப்புச் சோற்றைச் சொல்கிறது பெரும்பாணாற்றுப்படை துவையல் விளக்கம் பருப்பு என்பது பருமைப் பொருளது. ‘பருப்புடைப் பவளம் போல’ என வரும் சிந்தாமணி இப்பொருளைத் தெரிவிக்கும் (2273).… Read More »பருப்பு

பருமல்

பருமல்

பருமல் என்பதன் பொருள் பருத்த மரக்கை, படகில் ஊன்றி நிறுத்திப் பாய் கட்டப்படும் நெடுமரம்(கப்பற் குறுக்குமரம்) 1. சொல் பொருள் பருத்த மரக்கை படகில் ஊன்றி நிறுத்திப் பாய் கட்டப்படும் நெடுமரம் – மூங்கில்… Read More »பருமல்

பருமிதம்

பொருள் பெருமிதம் என்பது பெருமையாகவும் தன்னெடுப்பாகவும் இருநிலையில் அமையும். விளக்கம் பெருமிதம் என்பது பெருமையாகவும் தன்னெடுப்பாகவும் இருநிலையில் அமையும். இப்பெருமிதம் பருமிதம் எனவும்படும். பருமிதம் மகிழ்வையும் குறிக்கும். பருமித்தல் என்பது அழகுறத்தல் பண்ணுறுத்தல் என்பவற்றைக்… Read More »பருமிதம்

பருமை

பொருள் பருமை என்பது பருத்திருத்தல், பெருமை என்பவற்றை வெளிப்பட உணர்த்தும் விளக்கம் பருமை என்பது பருத்திருத்தல், பெருமை என்பவற்றை வெளிப்பட உணர்த்தும். பருஞ்சோளம், பருங்கீரை, பருந்தேக்கு, பருநெல், பருப்பொருள், பரும்படி, பருமட்டம், பருவட்டு, பருவுடல்… Read More »பருமை