சொல் பொருள்
(பெ) 1. ஐந்து என்ற எண், 2. அழகு, 3. தலைவன், 4. வியப்பு,
சொல் பொருள் விளக்கம்
ஐந்து என்ற எண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Five, beauty, lord, wonder
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி – பரி 10/97 நீர்விளையாட்டை ஆடிக் களித்து, வண்டுகள் மொய்க்கின்ற, மணத்தினால் மாட்சிமையுடைய ஐந்து மன்மத அம்புகளின் கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102 கைகளில் ஏந்தியிருக்கின்ற அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ – குறு 24/1,2 கரிய அடிமரத்தையுடைய வேம்பின் ஒள்ளிய புதுப்பூக்கள் என் தலைவர் இல்லாமலேயே வீணே பூத்து ஒழியுமோ? ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று – கலி 55/9 (நெற்றி) வியப்படையும் வகையில் தேய்ந்திருக்கிறது, ஆனால் அது பிறையும் இல்லை;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்