சொல் பொருள்
உடலில் தோன்றும் நீர் அல்லது சீழ் நிரம்பிய கட்டி, நீர்க்குமிழி, மரல் எனப்படும் பெருங்குரும்பையின் பழம்
சொல் பொருள் விளக்கம்
நீர்க்குமிழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
blister, pustule, boil, bubble, the fruit of the plant called Bowstring hemp.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் பரல் பகை உழந்த நோயொடு சிவணி மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் பொரு 42-45 ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில் ஏற்பட்ட)- சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால் பரல் கல்லாகிய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி, மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும், குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன் சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை மாரி மொக்குள் புடைக்கும் நாட – ஐங் 275/1-3 குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு பிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும் மழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே! அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – நற் 278/2 அடுத்து வளர்ந்த மரலின் பழம் போன்ற அரும்புகள் மலர்ந்து இதழ் விரிய – மரல் பழம் நீர் மொக்குள் போறலின் மொக்குள் எனப்பட்டது – ஔவை.சு.து.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்