சொல் பொருள்
(பெ) கௌதம முனிவரின் மனைவி,
சொல் பொருள் விளக்கம்
கௌதம முனிவரின் மனைவி,
இந்து தொன்மவியலின் அடிப்படையில் அகலிகை (அகல்யா) என்பவர் கௌதம முனிவரின் மனைவி ஆவார். தேவர்களின் தலைவனான இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, சூழ்ச்சி செய்து இவருடன் உறவுகொள்ள, அதனை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாக மாறச் சாபமிட்டார். இவ்வாறு கல்லாக மாறிய அகலிகை ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக இந்து சமய நூல்கள் பல சொல்லுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the wife of saint Gauthama
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினன் உற கல் உரு ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் – பரி 19/50-52 இந்திரன் இந்தப் பூனை, இவள் அகலிகை , இவன் வெளியில் சென்ற கவுதமன், இவன் சினங்கொள்ள கல்லுருவம் அடைந்த வகை இது என்று விளக்கிச் சொல்வோரும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்