சொல் பொருள்
அகவிலை – மிகுவிலை
சொல் பொருள் விளக்கம்
அக்கம் என்பதற்குத் தவசம் என ஒரு பொருள் உண்டு. எப்பொருளினும் வாழ்வுக்கு அடிப்படைத் தேவையானது தவசம் ஆதலால் அத் தவசப் பயிர் பயிரிடுதலைக் குறைக்கவோ அத் தவச விலையைப் பெருக்கி அளவைக் குறைக்கவோ கூடாது என்பதால் ‘அக்கம் (அஃகம்) சுருக்கேல்’ என்றனர். மற்றை மற்றைப் பொருள்களின் விலையை ‘அக்க விலை’ கொண்டே மதித்தனர். ஆதலால் ‘அஃக விலை’ ‘அக்கவிலை’ என வழங்கி அகவிலையாயிற்று. அவ்வகவிலையும் தாறுமாறாக ஏறிய நிலையில் மிகு விலைப் பொருள் தருவதாயிற்று. இந்நாளில் D.A எனப்படும் பஞ்சப்படியை அகவிலைப் படி (Dearness Allowance) என வழங்குதல் நேரிதெனப் பாவாணர் குறித்தார். அருந்தற்படி என்பதும் அதுவே. அருந்தல் பொருள்விலை ஏற்றத்தால் வாங்குதற்கு அரிய தட்டுப்பாடு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்