சொல் பொருள்
அக்கு – முள்
ஆணி – காலடியில் தோன்றிய கட்டி.
சொல் பொருள் விளக்கம்
முள் தைத்து அஃது எடுக்கப்படாமலே நின்று போனால் அவ்விடம் கட்டிபட்டுக் கல்போல் ஆகிக் காலையூன்ற முடியா வலிக்கு ஆளாக்கும், பின்னர் அவ்விடத்தை அகழ்ந்து கட்டியையும் முள்ளையும் அகற்றுதல் உண்டு. அதனை ஆணிபிடுங்குதல் என்பர். ‘காலாணி எடுக்கப்படும்’ என விளம்பரம் செய்து கொண்டு வீதியோரங்களில் இருப்பாரை நகரப்பகுதிகளில் காணலாம்.
அக்கமணி – முள் மணி. ‘ அக்கு வேறு ஆணி வேறாக பிடுங்குதல்’ என்பது வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்