சொல் பொருள்
(வி) வருந்து,
2. (பெ) 1. தளர்ச்சி, 2. வருத்தம்
சொல் பொருள் விளக்கம்
வருந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be sad, grieve, exhaustion, sorrow
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை புன் கால் நாவல் பொதி புற இரும் கனி கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்து பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் – நற் 35/1-5 பொங்கிவரும் அலைகள் மோதுவதினால் ஏற்பட்ட சரிவான மணலைக் கொண்டு அடைத்தகரையில் புல்லிய அடிமரத்தையுடைய நாவல் மரத்தின் பொதியைப் போன்ற வெளிப்பகுதியையுடைய பெரிய பழத்தை தன் இனத்தைச் சேர்ந்தது என்று எண்ணி சூழ்ந்த தும்பியைப் பழமென்று நினைத்து பலகால்களைக் கொண்ட நண்டு பற்றிக்கொண்ட பிடிக்கு வருந்தி மீட்டப்படாத நரம்பாய் இமிர்ந்து ஒலிக்கும் ஆரவாரத்தால் இரை தேர்ந்து உண்டு அசா விடூஉம் புள் இனம் இறைகொள – கலி 132/3 இரையைத் தேடியுண்டு களைப்பை ஆற்றிக்கொள்ளும் பறவைக் கூட்டம் தங்கிக்கொள்ள வேய் புரை பணைத்தோள் பாயும் நோய் அசா வீட முயங்குகம் பலவே – அகம் 47/18,19 மூங்கிலைப் போன்ற பெரிய தோள்களில் பரவும் நோயின் வருத்தம் தீரப் பலமுறை முயங்குவோம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்