சொல் பொருள்
(பெ) கடினமான பாதை,
சொல் பொருள் விளக்கம்
கடினமான பாதை,
சங்க அக இலக்கியங்கள், பொருளீட்டுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன், கடப்பதற்கு அரிய, ஆபத்துகள் நிறைந்த வழியில் பயணம் மேற்கொள்வதாகக் கூறுகின்றன. அத்தகைய வழிகள் அத்தம் எனப்பட்டன.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rough and dangerous path
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வௌவும் களவேர் வாழ்க்கை – பெரும் 39,40 வழிச்செல்வார் அலறும்படி அவரைத் தாக்கி அவரின் கையிலுள்ள பொருளைக் கைக்கொள்ளும் களவுள்ள வாழ்க்கை புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் சென்ற காதலர் – நற் 107/6,7 புல்லிய இலைகளைக் கொண்ட ஓமை மரத்தையுடையதும், புலிகள் நடமாடும் அத்தத்தில் சென்ற காதலர் மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் ஒன்று இரண்டு அல பல கழிந்து – பதி 41/14,15 மேகங்கள் பெய்வது மாறிப்போன மூங்கில்கள் காய்ந்துபோன அத்தம் ஒன்று, இரண்டு அல்ல, பலவற்றைக் கடந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்