Skip to content

சொல் பொருள்

(வி) 1. பொருந்து, ஒட்டியிரு, 2. படு, 3. சேர், 4. தழுவு, 5. கட்டு, 6. பாய், 7. அணுகு

2. (பெ) 1. படுக்கை,  2. மெத்தை, 3. தலையணை, சாயணை, 4. தடுப்பு, தடை,

சொல் பொருள் விளக்கம்

1. பொருந்து, ஒட்டியிரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be close, lie down, be in contact with, embrace, hug,  fasten, tie, flow, approach, bed, cushion mattress, pillow, long, cylindrical pillow, obstruction

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை – நற் 340/4

வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட ம்பினையுடைய வாளை மீன்

பொழுது கழி மலரின் புனையிழை சாஅய்
அணை அணைந்து இனையை ஆகல் – அகம் 363/4,5

பகற்பொழுது கழியவே குவியும் மலர் போல, அழகிய அணியுடையாளே, வாடி படுக்கையில் படுத்து இத்தன்மையுடையை ஆகாதே

வரம்பு அணைந்து
இறங்கு கதிர் அலம்வரு கழனி – புறம் 98/18,19

வரம்பைச் சேர்ந்து வளையும் நெற்கதிர் சுழலும் கழனியொடு

மா மலை அணைந்த கொண்மூ போலவும் – பட் 95

கரிய மலையைச் சேர்ந்த மேகம் போலவும்

உவ இனி வாழிய நெஞ்சே, ——————- ————— ——-
தாழ் இரும் கூந்தல் நம் காதலி
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே – அகம் 87/12-16

மகிழ்வாயாக, இப்பொழுது, நெஞ்சே —— —————— ————————-
தாழ்ந்த கரிய கூந்தலையுடைய நாம் காதலியின்
நீண்ட மூங்கில் போன்ற வனப்பினையுடைய தோளினையும் தழுவிக்கொண்டு

இணைத்த கோதை அணைத்த கூந்தல் – திரு 200

பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்

களிறு அணைப்ப கலங்கின காஅ – புறம் 345/1

களிறுகளைக் கட்டுவதால் அவற்றால் திமிரப்பட்டு நிலைகலங்கின சோலையிலுள்ள மரங்கள்

காவிரி அணையும் தாழ் நீர் படப்பை – புறம் 385/8

காவிரியாறு பாயும் தாழ்ந்த நிலப்பாங்கினையுடைய தோட்டங்களையும்

மலை அயல் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை
அணைய கண்ட அம் குடி குறவர் – நற் 108/1-3

மலைக்கு அயலாக செழித்துவளர்ந்த கரிய நிறங்கொண்ட தினைப்புனத்தில் தன் துணையினின்றும் பிரிந்த கொடிய யானை அணுகுவதைக் கண்ட அழகிய குடியிருப்பின் கானவர்

பொழுது கழி மலரின் புனையிழை சாஅய்
அணை அணைந்து இனையை ஆகல் – அகம் 363/4,5

பகற்பொழுது கழியவே குவியும் மலர் போல, அழகிய அணியுடையாளே, வாடி படுக்கையில் படுத்து இத்தன்மையுடையை ஆகாதே

பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் – பெரும் 373

பாம்பணையாகிய படுக்கையில் துயில் கொண்டோனுடைய திருவெஃகாவிடத்து

துணை புணர் அன்ன தூ நிற தூவி இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 132,133

தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால் இணைத்த மெத்தையை மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக)தலையணைகளும் இட்டு,
– அணை இட்டு – தலையனை, சாயணை போன்றவற்றை இட்டு – ச.வே.சு.உரை

அணை மருள் இன் துயில் அம் பணை தட மென் தோள் – கலி 14/1

தலையணை தருவதைப் போன்ற இன் துயிலைத் தரும், அழகிய மூங்கில் போன்ற பெரிய மென்மையான தோள்களையும்,

கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
—————– ————————– பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/4-8

வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன் —————- ———————————-
பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *