சொல் பொருள்
(பெ) தேவர் உலகத்துப் பெண்
சொல் பொருள் விளக்கம்
தேவர் உலகத்துப் பெண்
இவர், சூர் அரமகளிர், வான் அரமகளிர், வரை அரமகளிர் எனப் பலவகைப்படுவர்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Celestial damsel
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண் தாழ் அருவி அரமகளிர் ஆடுபவே – கலி 40/23 குளிர்ச்சியா இறங்கும் அருவியில் அரமகளிர் நீராடுவர் சூர் அரமகளிர் ஆடும் சோலை – திரு 41 வருத்தும் தெய்வமகளிர் விளையாடும் சோலை வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117 வானத்தில் உறையும் தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட வரை அரமகளிர் புரையும் சாயலள் – ஐங் 255/2 மலையில் இருக்கும் அரமகளிர் போன்ற சாயலுடையவள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்