சொல் பொருள்
(பெ) அரித்தெழும் ஓசையையுடைய ஒரு பறை, தட்டைப்பறை
சொல் பொருள் விளக்கம்
அரித்தெழும் ஓசையையுடைய ஒரு பறை, தட்டைப்பறை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
drum that makes cracking sound
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விளைந்த கழனி, வன் கை வினைஞர் அரிப்பறை – மது 262 நெல் விளைந்த கழனியில், வலிய கையைக் கொண்ட வினைஞரின் அரிப்பறை அரிப்பறையால் புள் ஓப்பி – புறம் 395/7 அரிப்பறையால் பறவைகளை ஓட்டி பெருமுதுச் செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறு தோள் கோத்த செவ் அரிப்பறையின் கண் அகத்து எழுதிய குரீஇப் போல – நற் 58/1-3 முதிர்ந்த செல்வர்களின் பொன் அணிகலன்களையுடைய புதல்வர் தம் சிறிய தோளில் மாட்டிய செம்மையாக ஒலிக்கும் அரிப்பறையின் மேல்பக்கம் வரைந்த குருவியைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்