சொல் பொருள்
(பெ) 1. பின்னல், பிணக்கம், 2. புதர்க்காடு, 3. சிறுதூறு,
சொல் பொருள் விளக்கம்
1. பின்னல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
interlacing, Low jungle, thicket
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நூலின் வலவா நுணங்கு அரில் மாலை – பொரு 161 நூலால் கட்டாத நுண்மையினையும் பின்னலையும் உடைய பொன்னரிமாலை பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379 பின்னிவிட்டதைப் போன்ற பிணக்கமுள்ள புதர்களில் நுழையும்போதெல்லாம் அரில் இவர் புற்றத்து அல்குஇரை நசைஇ – அகம் 257/19 சிறுதூறுகள் படர்ந்த புற்றின்கண் இரவில் உண்ணும் இரையை விரும்பி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்