சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககால வள்ளல்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககால வள்ளல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a philanthropist of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு சூர் உடை பலியொடு கவரிய குறும் கால் கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும் மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின் – நற் 367/1-7 வளைந்த பார்வையையுடைய காக்கையின், கூரிய வாயையுடைய பேடை நடுங்குகின்ற சிறகுகளையுடைய தன் குஞ்சினைத் தழுவிக்கொண்டு, தன் சுற்றத்தைக் கரைந்து அழைத்து கரிய கண்போன்ற பொறிக்கறியுடன், செந்நெல்லின் வெண்மையான சோற்றை தெய்வத்துக்கு இடும் பலியுடன் கவர்ந்துகொள்ளும்பொருட்டு, குறிய கால் நாட்டிக் கட்டிய உணவுடைய நல்ல வீடுகளில் கூட்டமாக இருக்கும் பழமையான வீடுகளையுடைய அருமன் என்பவனின் பெரும்புகழ்பெற்ற சிறுகுடி என்ற ஊரைப் போன்ற மென்மையான இயல்பையுடைய அரிவையே! உனது பலவாகிய கரிய கூந்தலில் இருப்பதைப் போன்று கள்ளின் கேளிர் ஆத்திரை உள்ளூர் பாளை தந்த பஞ்சி அம் குறும் காய் ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதி அருமன் மூதூர் அன்ன – குறு 293/1-4 கள்குடிக்கும் விருப்பத்தையுடையவரின் பயணம், உள்ளூரில் பாளை ஈன்ற நாரினைக் கொண்ட அழகிய சிறிய காயையுடைய உயர்ந்த கரிய பனையின் நுங்கினை உண்டு திரும்பும் ஆதி அருமன் என்பானின் மூதூர் போல, இந்த இருவரும் ஒருவரே என்றுரைப்பார் பொ.வே.சோ.தம் குறுந்தொகை உரையில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்