சொல் பொருள்
(வி) 1. மனக்கலக்கம் அடை, மனம்சுழல், 2. சுழல்
சொல் பொருள் விளக்கம்
1. மனக்கலக்கம் அடை, மனம்சுழல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be agitated, be pertubed
whirl
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என புன் தலை மன்றம் நோக்கி மாலை மட கண் குழவி அலம்வந்து அன்ன – குறு 64/1-3 பசுக்கூட்டம் மேய்தலை விட்டு திரும்பும் நீண்ட வழிக்கு வந்தது என, பொலிவிழந்த மன்றத்தைப் பார்த்து, மாலையில் மடப்பம் பொருந்திய கண்களையுடைய கன்றுகள் எதிர்நோக்கி ஏமாறுவதைப் போல அலம்வந்தன்ன – மனம் சுழன்றாற் போன்ற – உ.வே.சா உரை விளக்கம் வரம்பு அணைந்து இறங்கு கதிர் அலம்வரு கழனி – புறம் 98/18,19 வரப்பைச் சேர்ந்து வளையும் நெற்கதிர் சுழலும் கழனியொடு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்