சொல் பொருள்
ஆட்டுதல் – அலைக்கழித்தல், ஆட்டி வைத்தல்
சொல் பொருள் விளக்கம்
மாவு ஆட்டுதல், எண்ணெய் ஆட்டுதல்; கரும்பு ஆட்டுதல் என்பவை வழக்கில் உள்ளவை. இனித் தொட்டில் ஆட்டுதல், காலாட்டுதல் என்பவை வேறான ஆட்டுதல் வழிப்பட்டவை. மாவு ஆட்டுதல் போன்ற ஆட்டுதல் வழியில் வருவதே அலைக் கழித்தல் பொருள் தரும் ஆட்டுதலாம். ஆட்டப்படும் பொருளின் தோற்றம் முழுவதாக மாற, அரைத்தோ கசக்கிப் பிழிந்தோ உருச்சிதைப்பதே ஆட்டுதல் எனப்படும். அவ்வாறு நிலைமாறச் செய்வது முதல் வகை ஆட்டுதல். சொன்ன சொன்னவாறெல்லாம் செய்ய வைப்பதும் ஆட்டுதலே. அது பின்னுள்ள வகையைச் சேர்ந்தது. ஆட்டி வைத்தல் என்பதும் அது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்