Skip to content
ஆல்

ஆல் என்பதன் பொருள்ஆலமரம்

1. சொல் பொருள்

ஆல், ஆலம் = நீர், தண்ணீர்

(பெ) 1. மிகுதி, 2. கார்த்திகை நட்சத்திரம் பார்க்க ஆரல், 3. விழுதூன்றி படரும் ஆலமரம்

2. சொல் பொருள் விளக்கம்

ஆல் – நீர், ஆலம் என்னும் சொல்லுக்கு தண்ணீர் என்னும் பொருள் உண்டு என்பதைத் திட்டமாக அறிகிறோம். சில சமயங்களில் மேகத்தில் இருந்து நீர் துளிகள் கட்டி கட்டியாக நிலத்தில் விழுவது உண்டு. இந்த நீர்க்கட்டிகளை ஆலங்கட்டி என்று தமிழில் கூறுகிறோம்.

ஆலங்கட்டி- நீர்க்கட்டி. கன்னடம். தெலுங்கு, மலையாள மொழிகளில் ஆலங்கட்டியை ஆலி என்று கூறுகிறார்கள்.

தமிழர் ஆலங்கட்டி என்றும், தெலுங்கரும் கன்னடத்தாரும் ஆலிகல் என்றும், மலையாளத்தார் ஆலிப்பழம் என்றும் கூறுகிறார்கள். ஆலங்கட்டியைத் தமிழில் ஆலி என்றுங் கூறுவதுண்டு. மரங்களுக்கு நீர் பாய்ச்ச அமைக்கப்படும் பாத்திக்கு ஆலவால என்று கன்னட மொழியில் பெயர் கூறுகிறார்கள். நீர் பாய்ச்ச அமைக்கும் பாத்திக்கும் ஆலாலம் என்னும் பெயர் தமிழில் உண்டு என்பதை அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய இலக்கியச் சொல் அகராதியில் காணலாம்.

எனவே, ஆலவால, ஆலாலம் என்னும் பெயர்கள் ஆல் (நீர்) என்னும் சொல்லடி யாகப் பிறந்த சொற்கள் என்பதில் ஐயமில்லை.
(அஞ்சிறைத் தும்பி. 119, 124)

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

plenty, The sixth of the 27 stars, banyan tree

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப – அகம் 365/1

அகலம் வாய்ந்த வானத்தில் மிக்க இருள் பரக்க

வடவயின் விளங்கு ஆல் உறை எழுமகளிருள் – பரி 5/43

வடதிசையில் விளங்கும் கார்த்திகை மகளிர் எழுவருள்ளும்

ஆல் கெழு கடவுள் புதல்வ – திரு 256

ஆல மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்கடவுளின் புதல்வனே!

ஆல்கெழுகடவுள் புதல்வ மால் வரை - திரு 256

ஆல்அமர்செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த - சிறு 97

வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் - பரி 5/43

ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் - பரி 18/7

ஆல்அமர்செல்வன் அணி சால் பெரு விறல் - கலி 81/9

ஆல்அமர்செல்வன் அணி சால் மகன் விழா - கலி 83/14

அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப - அகம் 365/1

ஆல்அமர்கடவுள் அன்ன நின் செல்வம் - புறம் 198/9

நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆல்
இனி வர மணம் செயல் வேண்டுமே என்றான் - தேம்பா:5 42/3,4

ஆல் அடி நிழற்றும் பொச்சை அன்று உயிர் தந்தது என்றான் - தேம்பா:12 17/4

காதல் மிக்கு ஆல் கற்றவை கண்ணா கசடு உள்ளத்து - தேம்பா:28 117/1

நல் என்று உறை நாடர் விளித்தனன் ஆல்
செல் என்று முழங்கிய திண் முரசான் - தேம்பா:36 61/3,4

இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் - குறள் 10:1

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

ஆல்அமர்செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் - மது:23/91

ஆல்அமர்செல்வன் புதல்வன் வரும் ஆயின் - வஞ்சி:24/70

ஆல்அமர்செல்வன் புதல்வன் வரும் வந்தால் - வஞ்சி:24/77

ஆல்அமர் செல்வன் மகன் விழா கால்கோள் - மணி:3/144

மன்றல் கொள் மார்பினான் வந்து ஒரு ஆல்நிழல் - சிந்தா:6 1459/3

கையது அவன் கடலுள் சங்கம் ஆல் பூண்டதுவும் - முத்தொள்:67/1

செய்ய சங்கு ஈன்ற செழு முத்து ஆல் மெய்யதுவும் - முத்தொள்:67/2

மன் பொரு வேல் மாறன் வார் பொதியில் சந்தனம் ஆல்
என் பெறா வாடும் என் தோள் - முத்தொள்:67/3,4

பைய நடக்கவும் தேற்றாய் ஆல் நின் பெண்மை - முத்தொள்:73/3

அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை - முத்தொள்:76/2

காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் - முத்தொள்:78/2

பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் - முத்தொள்:92/2

வேம் ஆல் வயிறெரிய வேந்து - முத்தொள்:98/4

இரு கோடும் செய்தொழில் வேறு ஆல் ஒரு கோடு - முத்தொள்:100/2

மாற்றார் மதில் திறக்கும் ஆல் - முத்தொள்:100/4

ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் - பால:8 11/4

வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை - அயோ:4 10/2

ஆல் இலை பள்ளியானும் அங்கதனோடும் போனான் - கிட்:8 1/3

ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண் பலகை நொய்ய - கிட்:13 39/1

ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் - சுந்:5 61/3

அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா - சுந்:6 44/4

வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் - யுத்2:15 249/4

உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன் - யுத்3:27 16/1

ஆல்கெழுகடவுள் புதல்வ மால் வரை - திரு 256

ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற - தேவா-சம்:478/3

ஆல் அடைந்த நீழல் மேவி அரு மறை சொன்னது என்னே - தேவா-சம்:515/3

கல் ஆல் நிழல் மேய கறை சேர் கண்டா என்று - தேவா-சம்:915/1

பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றை - தேவா-சம்:1089/3

உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் - தேவா-சம்:1094/3

அரும் தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ் - தேவா-சம்:1185/3

ஆல் இள மதியினொடு அரவு கங்கை - தேவா-சம்:1198/1

ஆல் அது ஊர்வர் அடல் ஏற்று இருப்பர் அணி மணி நீர் - தேவா-சம்:1265/3

ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும் - தேவா-சம்:1382/6

ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே - தேவா-சம்:1712/4

கல் ஆல் நிழல் மேயவனே கரும்பின் - தேவா-சம்:1722/1

கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று - தேவா-சம்:1962/1

அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் - தேவா-சம்:2176/2

அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி - தேவா-சம்:2438/1

இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் - தேவா-சம்:3206/3

துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் - தேவா-சம்:3641/2

ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே - தேவா-சம்:4062/4

ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று - தேவா-அப்:395/1

ஆல் அலால் அமுதம் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே - தேவா-அப்:395/4

வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் - தேவா-அப்:621/1

அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை - தேவா-அப்:845/2

அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை - தேவா-அப்:845/2

அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய - தேவா-அப்:1597/3

ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே - தேவா-அப்:2302/4

அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம் - தேவா-அப்:2747/3

ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை - தேவா-அப்:2827/1

ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும் - தேவா-அப்:2833/2

அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய் - தேவா-அப்:3058/1

போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து - தேவா-சுந்:566/1

கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர - தேவா-சுந்:670/2

செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள் - தேவா-சுந்:711/3

குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள் - தேவா-சுந்:778/3

அரும் தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி ஓர் ஆல் அதன் கீழ் - தேவா-சுந்:1007/1

அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச - தேவா-சுந்:1023/3

பண்டு ஆல் இயலும் இலை வளர் பாலகன் பார் கிழித்து - திருக்கோ:105/1

வண்டு ஆல் இயலும் வளர் பூம் துறைவ மறைக்கின் என்னை - திருக்கோ:105/3

அரசுடன் ஆல் அத்தி ஆகும் அக்காரம் - திருமந்:1667/1

படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போல - திருமந்:2009/1

புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன - திருமந்:2087/2

அடியார் பவரே அடியவர் ஆம் ஆல்
அடியார் பொன்னம்பலத்து ஆடல் கண்டாரே - திருமந்:2740/3,4

ஆல் இன சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம் - 1.திருமலை:2 21/4

நிகர்இல் சராசரங்கள் எல்லாம் நிழலினாலே நிறைதலின் ஆல் நிறை தவம் செய் இமய பாவை - 4.மும்மை:5 93/2

மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று - நாலாயி:2150/2

அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல் மேல் கனைத்து உலவு - நாலாயி:2374/2

அளந்தானை ஆழி கிடந்தானை ஆல் மேல் - நாலாயி:2398/3

ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே - நாலாயி:3880/4

கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என - திருப்:130/5

கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை - திருப்:340/3

கார் ஆடு அ குழல் ஆல் ஆலக்கணை கண்கள் சுழன்றிடவே முகங்களில் - திருப்:412/1

குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே - திருப்:698/1

ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை - திருப்:699/1

இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு - திருப்:808/5

ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன் - திருப்:970/5

அருகு பார்ப்பதி உருகி நோக்க ஒரு ஆல் கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ என ஏகி - திருப்:1062/5

ஆல் இலையை போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் மிதத்தாலும் வளைப்பிடுவோர் மேல் - திருப்:1160/3

புகுந்து நூற்றுவர்க்கு ஒழிந்து பார்த்தனுக்கு இரங்கி ஆல் புறத்து அலைமேவி - திருப்:1208/6

தென்னுறு கதிர் வேல் சிங்கம் சீத நீர் ஆடினார் ஆல் - சீறா:1574/4

அடுத்து உறைந்த அவண் எங்கு என்ன அணி இதழ் வாய் விண்டார் ஆல் - சீறா:1583/4

கரம் தங்கிய நல் அருள் பெருகும் ஹபீபு முகம்மது உரைத்தனர் ஆல் - சீறா:1591/4

விழுதுடை தனி ஆல் என இருந்த தொல் வியாதனை முகம் நோக்கி - வில்லி:2 9/2

ஆல் வரும் புரவி திண் தேர் அறன் மகன் அநுசர் ஆன - வில்லி:10 66/1

பன்னகாதிப பாயலோ பச்சை ஆல் இலையோ - வில்லி:27 78/2

ஆல் அமர் சினையில் பல் பெரும் காகம் அரும் பகல் அழிந்த கூகையினால் - வில்லி:46 205/2

பிடி ஏற்றினன் ஆல் பெருந்தகை உவந்து என் - உஞ்ஞை:44/155

பூல் வேல் என்றா ஆல் என் கிளவியொடு - எழுத். புள்.மயங்:80/1
ஆல்
ஆல்(ஆலமரம்)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *