சொல் பொருள்
ஆளான ஆள் – பெரிய ஆள்
சொல் பொருள் விளக்கம்
ஆள் என்பது ஆளும் திறம் உடைமையால் பெற்ற பெயர் ஆள் எனின் ஆளுமை வேண்டும். பெண்ணும் ஆளே! ஆணும் ஆளே! எத்தனை ஆள் என்பதில் ஆண் பெண் பாற்பாகுபாடு இல்லை என்பது அறிக. ‘ஆள்’ இயல் பாலுக்குத் தக அமையும் அவ்வளவே. அவ்வப்பாலின் இயலில் மிக ஆளுமை உடையார் ‘ஆளான ஆள்’ எனப்படுவார். ஆள்களில் ஆள் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் என்னும் பொருளதாம். ‘ஆனானப் பட்ட ஆள்’ என்பதும் இத்தகையதே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்