Skip to content

சொல் பொருள்

(பெ) 1. சக்கரம், 2. கடல், 3. மோதிரம்

ஆழ்ந்திருப்பது ஆழி. (கடல்)

சொல் பொருள் விளக்கம்

ஆழ்ந்திருப்பது ஆழி. (கடல்) (ஒப்பியன் மொழிநூல். 157.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wheel, sea, ring

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அடைகரை, ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நற் 11/7

கடற்கரையில், தேரின் சக்கரத்தில் படாதவாறு நண்டுகளை விலக்கி

ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி – குறு 372/4

கடல் மேலே எறிந்த கருமணலாகிய சேறு ஒழுகியோடிவதால் ஏற்பட்ட அருவி

கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் – பரி 7/46

கைவளைகள், மோதிரங்கள், தலை அணிகள், அணிந்துள்ள துகில்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *