சொல் பொருள்
(வி) அதிர், அசை,
சொல் பொருள் விளக்கம்
அதிர், அசை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
agitate, shake
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின் புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் ஆறு செல் வம்பலர் காய் பசி தீர சோறு அடு குழிசி இளக விழூஉம் வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து – பெரும் 363-367 மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின் பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய், வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படி, (அவர்)சோற்றை ஆக்குகின்ற பானை அதிரும்படி விழுகின்ற கெடாத புதுவருவாயினையுடைய செல்வம் பொருந்தின பாக்கத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்