சொல் பொருள்
(வி) 1. அறு, 2. இழு
(பெ) 3. நெய்ப்பு, எண்ணெய்ப்பசை, பளபளப்பு,, 4. பேனின் முட்டை அல்லது குஞ்சு
(பெ.அ) 5. ஈரமான, 6. இரண்டு, 7. பெரிய
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : பொருள்பிணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saw, pull, oiliness, glossiness, nit, wet, adjectival form of TWO, large
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த – குறு 31/5 சங்கை அறுத்துச் செய்த ஒளிவிடும் வளையல்களை நெகிழச்செய்த பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் – அகம் 8/7 பலாமரங்கள் செறிந்த மலைப்பகுதியில் புலால் நாற இழுத்துச் செல்லும் துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – திரு 20 தோழியர் ஆராய்ந்த நெய்ப்பின்னையுடைய மயிர் ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 219 ஈரை உடைய பெரிய தலையில் நிறையச் சூடி ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி – பெரும் 341 ஈரமான சேற்றில் ஆடிய கரியநிற பலவான குட்டிகள் எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 64 திரையால் வளைக்கப்பட்ட இரண்டாகிய அறையினுள் மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர – அகம் 267/8 மயிர் உள்ள கால்களையுடைய கரடிகளின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ண
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்