Skip to content

உசுப்புதல்

சொல் பொருள்

உசுப்புதல் = உயிர்ப்புறச் செய்தல். உயிர்போனது போல் கிடப்பவனை – கிடப்பதை – எழுப்பி விட்டு உயிர்த் துடிப் புடைமையாக்குவது உசுப்புதல் ஆகும்

சொல் பொருள் விளக்கம்

உசுப்புதல் = உயிர்ப்புறச் செய்தல். உயிர்போனது போல் கிடப்பவனை – கிடப்பதை – எழுப்பி விட்டு உயிர்த் துடிப் புடைமையாக்குவது உசுப்புதல் ஆகும். “உசுப்பிப் பார்த்தேன்; அசையாமல் கிடக்கின்றான்” என்பது ஏச்சு மொழி. “நாயை உசுப்பி விடு” என்பது ஆயர் வழக்கு. ‘உசு உசு’ என்று நாயை ஏவுவதை, உசுக்காட்டுதல் என்பதும் பெருவழக்கே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *