சொல் பொருள்
உச்சுக்கொட்டல் – கேட்டல், ஒப்புக்கொள்ளல், வருத்தம் தெரிவித்தல்
சொல் பொருள் விளக்கம்
‘உச்’ ‘உச்’ என்பது வாயின் ஒலிக்குறிப்பு, ஒருவர் வருந்தத் தக்க அல்லது உணர்வூட்டத் தக்க ஒரு செய்தியைச் சொல்லும்போது அதனைக் கேட்பவர் வாயால் உச்சிட்டுக் கொண்டு கேட்பது வழக்கம். அவ்வாறு கேட்பதை உச்சுக் கொட்டல் என்பர்.
உச்சுக் கொட்டுதல் என்பது ஏற்றுக் கொள்ளுதல். ஒப்புக் கொள்ளுதல், வருத்தம் தெரிவித்தல் முதலிய பொருள்களைத் தருவதாய் வழக்கில் உள்ளது. “உச்சு உச்சு என்று சொல்லும் போது கேட்டு விட்டு இப்பொழுது சொல்வதைப் பாரேன்; செய்வதைப் பாரேன்” என்று மாறுபட நடக்கும்போது இடித்துக் காட்டுவதும் வழக்கே. ‘ஊம்’ போடல் காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்