Skip to content

சொல் பொருள்

(வி.மு) 1. உண்ணுவேன், நுகர்வேன், 2. உண்க,

சொல் பொருள் விளக்கம்

1. உண்ணுவேன், நுகர்வேன்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(I) will enjoy (through the senses)

(please) eat

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

யாரையோ எம் அணங்கியோய் உண்கு என
சிறுபுறம் கவையினனாக – அகம் 32/8,9

யாரோ, எம்மை வருத்தினவளே, நின்னை நுகர்வேன் என்று கூறி
எனது பிடரியை அணைத்துக்கொண்டானாக

தலைவன், தலைவியிடம் ’உன்னை முத்தமிடுவேன்’ என்று சொல்வதை, ‘உன் பற்களை உண்பேன்’ எனக்
கூறுவதாகப் புலவர் படைப்பர்.

எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு உண்கு என – நற் 17/6

செல்லாயோ நின் முள் எயிறு உண்கு என – நற் 134/8

கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு உண்கு என – நற் 204/6

படலை முன்றில் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கு என – புறம் 319/5,6

படல்கட்டிய முற்றத்தில் சிறிய தினையாகிய உலர்ந்ததை
புறாக்களும், இதற் பறவைகளும் முற்றவும் உண்க என்று தெளித்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *