சொல் பொருள்
(பெ) 1.வலிமை, 2. மன திடம், உறுதி, 3. மார்பு, நெஞ்சு
உரம் என்பது அறிவாதல்
சொல் பொருள் விளக்கம்
உரம் என்பது அறிவாதல் “உரன் என்னும் தோட்டி யான்” (குறள். 24) என்பதனானும் அறிக. (திருக். 600. பரி.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strength, resolution, chest, bosom
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 121 வலிமையை(த் தன்னிடத்து)க் கொண்ட உருமேற்றின் இடி(யைப் போன்று ஒலிக்கும்)முரசுடன் உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி – நற் 246/5 உறுதியான நெஞ்சத்தோடு பாலை வழிகள் பலவற்றைக் கடந்து உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி – அகம் 279/7 உள்ளத்திலே மூண்ட நெஞ்சினைச் சுடுகின்ற (கவலையாகிய) மிக்கதீயினை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்