Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கதவு, 2. காப்பு, காவல், 3. அங்குசம்,  4. ஆணை,  5. வனப்பு, அழகு,

தோட்டி என்பது வளை கத்தி

யானைப் பாகன்

சொல் பொருள் விளக்கம்

தோட்டி என்பது அங்குசம் எனப்படும் வளைகருவி. தொடு, தோடு என்பவை வளைவுப் பொருளவை. தோட்டி என்பது வளை கத்தி என்னும் பொருளில் குமரி மாவட்டத்திலும், தோட்டை, துரண்டு என்பவை அப் பொருளில் நடைக்காவு வட்டாரத்திலும் வழங்குகின்றன. தோட்டி என்பது அங்குசம் என்னும் வளை கருவியாம். அதனையுடையவன் யானைப் பாகன். அதனால் “தோட்டி முதல் தொண்டைமான் வரை” எனப்பழமொழி ஆயிற்று. தொண்டைமான், தொண்டை நாட்டரசன்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

door, watch, guard, Elephant hook or goad, authority, loveliness, beauty

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 693

அகநாட்டைச் சூழவுடைத்தாகிய நன்றாகிய அரண்களில் இட்ட வருத்தத்தையுடைய கதவுகளும்

நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5

நீ பகைத்து மேற்சென்றவரின் பெரிய மதில்கள் காப்புகளை இழந்தன

எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின்
தோட்டி தந்த தொடி மருப்பு யானை – பதி 38/5,6

பகைவரின் கோட்டை மதிலின் முகப்பு சிதையும்படியாக அங்குசத்தால் குத்தி ஏவுதலினால்,
அந்த நாட்டின் ஆளுமையை உனக்கே பெற்றுத்தந்த பூண் அணிந்த தந்தங்களைக் கொண்ட யானைப்படையையும்

வண்டு பொரேரென எழும்
கடி புகு வேரி கதவம் இல் தோட்டி– பரி 23/31,32

வண்டுகள் திடுமென மேலே எழும் –
மணம் பொருந்திய தேன் நிரம்பிய மலர்மாலைகளில் மறைவின்றி மொய்த்திருந்த அழகு மிக்க (அந்த வண்டுகள்)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *