சொல் பொருள்
(பெ) துன்பம், வருத்தம்
சொல் பொருள் விளக்கம்
உறல் என்னும் சொல் துக்கத்தை அடைதற்குரிய வினை. இதன் எதிர்மொழியாகிய பெறல் என்பது சுகத்தை அடைதற்குரிய வினை. இஃது இவ்வாறு என்பதை உறு, பெறு எனும் பகுதியடியாகப் பிறந்த ஊறு. வேறு என்னும் பெயர்கள் முறையே துன்பம் இன்பம் என்னும் பொருளிலே வழங்குதல் நோக்கித் தெளிக. (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 2- 79)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suffering, distress
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காட்டு மாவும் உறுகண் செய்யா – பெரும் 43 காட்டு விலங்குகளும் துன்பம் விளைவிக்கமாட்டா
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்