Skip to content

சொல் பொருள்

(வி) 1. படு, 2. ஈடுபடு, மேற்கொள், 3. சேர், பொருந்து, இணை, 4. அனுபவி, 5. உள்ளாக்கப்படு, 6. நோக்கிச் செல்,

2. வினைப்படுத்துத்தும் வினை

3. (பெ.அ) மிகுதியாக, மிகுதியான

சொல் பொருள் விளக்கம்

1. படு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

come in contact with, be devoted to, join together, experience, undergo a process, approach, verbalizer, auxiliary, verb, abundant, copious

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து – முல் 84

அம்பு தைத்த மயில் போல நடுங்கி, அணிகலன்கள் நெகிழ்ந்து,

உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் – நற் 363/4

மேற்கொண்டுள்ள தொழிலில் தளர்ச்சியடையாமல், சோர்வின்றி இருக்கும் கம்மியன்

பல உறு முத்தின் பழி தீர் வெண் பல் – பொரு 28

பலவும் சேர்ந்த முத்துக்கள் போல் குற்றம் தீர்ந்த வெண்மையான பல்லினையும்

அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் – மது 259

சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை

காடி கொண்ட கழுவு_உறு கலிங்கத்து – நெடு 134

கஞ்சி போட்டுக் கழுவுதலுக்கு உள்ளாக்கப்பட்ட துகிலின்

உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் – நற் 336/7

மிக்க சினத்தையுடைய களிறு, அங்கு வருகின்ற புலியை எதிர்பார்த்திருக்கும்

கவை கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் – புறம் 215/1

பிளவுபட்ட கதிரையுடைய வரகு அரிசியின் குற்றுதலுற்ற சோறு

உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன் – சிறு 122

புலி(போன்ற) மிக்க வலிமையினையும் உடைய ஓவியர் குடியில் தோன்றியவனும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “உறு”

  1. அருமையான விளக்கம் . சிலர் ஒரு துயர் என்பது வினைத்தொகை அல்ல உரிச்சொற்றொடர் என்று கூறுகிறார்கள் எப்படி எடுத்துக் கொள்வது ஐயா விளக்கம் தாருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *