சொல் பொருள்
(வி) 1. இற, 2. கழி, நீங்கு, 3. குறைந்துபோ,
சொல் பொருள் விளக்கம்
1. இற,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
die, expire, become diminished
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெம் சுரத்து உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/2,3 வெம்மையான நிலத்தில் இறந்துபோன பயணியரின் தழையிட்டு மூடிய கற்குவியல் ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6 ஈன்று சில நாள்கழிந்த மென்மையான நடையையுடைய இளமையான பெண்யானை பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி – அகம் 23/2 ஒலி அடங்கிப்போயிற்று,முழவின் குரல் போன்ற ஒலியினையுடைய மேகம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்