Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஒலியெழுப்பு,  2. அலை, வருத்து

சொல் பொருள் விளக்கம்

1. ஒலியெழுப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

howl, stir up

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/5,6

பசுவானது ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்
நாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை.

குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி – அகம் 94/8

குள்ளநரிகளை அலைத்து ஓட்டும் மிக்க இருளில் நீண்ட ஒலி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *