சொல் பொருள்
(பெ) 1. அசைவு, முன்னும் பின்னுமான ஆட்டம், 2. ஊஞ்சல்,
சொல் பொருள் விளக்கம்
அசைவு, முன்னும் பின்னுமான ஆட்டம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swinging to and fro, swing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 30 பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும் பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி – நற் 368/1,2 பெரிய தினைப்புனத்தின் கதிர்களைக் கொத்திச் செல்லும் சிறிய கிளிகளை விரட்டி, கரிய அடிமரத்தைக் கொண்ட வேங்கைமரத்தில் ஊஞ்சல் ஆடி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்