சொல் பொருள்
(பெ) 1. முன்னேறிப் படையினை எறிதல், 2. எடுத்தெறிகை
சொல் பொருள் விளக்கம்
1. முன்னேறிப் படையினை எறிதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
advance and attack
beating as of a drum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எடுத்தேறு ஏய கடிப்பு புடை வியன்_கண் – பதி 41/23 எடுத்து எறிதலைத் தெரிவிக்கும் குறுந்தடியால் அடிக்கப்படுகின்ற அகன்ற முகப்பையுடைய முரசு, – எடுத்தேறு – முன்னேறிப் படையினை எறிதல் – – ஔ.சு.து.உரைவிளக்கம் எடுத்தேறு ஏய கடி புடை அதிரும் – பதி 84/1 போர்க்களத்தில் வீரரை முன்னேறிச் செல்ல ஏவுகின்ற வகையில் குறுந்தடியால் புடைக்கப்பட்டு அதிர்கின்ற – வீரர்க்கு முரசு முழக்கித் தெரிவிக்கப்படுவது பற்றி, ‘எடுத்தேறு ஏய முரசம்’ என்றும்— – ஔ.சு.து.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்