சொல் பொருள்
(பெ) 1. என் தந்தை
2. என் தலைவன்,
சொல் பொருள் விளக்கம்
என் தந்தை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
my father
my master, my lord
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் – குறு 40/2 என் தந்தையும் உன் தந்தையும் எந்த வழியில் உறவினர்? ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5 எனக்குப் பற்றுக்கோடாக இருக்கும் என் காதலனாகிய தலைவன் எங்கு உள்ளானோ? இடுக்கண் இரியல் போக உடைய கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் – புறம் 388/6.7 பசித்துன்பம் பறந்தோடிப்போக தான் உடைய பொருள்களைக் கொடுத்தான், எங்கள் தலைவன், கொடையால் மேம்பட்ட தோன்றல்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்