சொல் பொருள்
(பெ)எழிலி என்பது அழகு, மழைபெய்யும்/பெய்த நிலையிலுள்ள மேகம்
சொல் பொருள் விளக்கம்
எழிலி என்பது அழகு. எழில் வாய்ந்த பொருள் எழிலியாகும்.(தமிழ் விருந்து. 4.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cloud ready to pour down, or just after rain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே – ஐங் 455/2 பெருத்த முழக்கத்தையுடைய மேகம் கார்ப்பருவத்தைத் தொடங்கிவைத்தது. பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் – நற் 5/5,6 பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகங்கள் தெற்குப்பக்கமாய் எழுந்து முழங்கும் முன்பனிக்காலத்திலும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்