Skip to content

1. சொல் பொருள்

(பெ) 1. கடையெழு வள்ளல்களுளொருவன், 2. திரை, எழினி என்னும் பெயர் குடிமக்களுக்குப் பாதுகாப்பு வழங்குபவன் எனப் பொருள்படும், 3. அழகிய ஒருவன்/ஒருத்தி

2. சொல் பொருள் விளக்கம்

எழினி என்னும் பெயருடன் சங்ககாலத்தில் பல மன்னர்கள் வாழ்ந்துவந்தனர்

  • பொகுட்டெழினி – அதியமானின் மகன்
  • வாய்வாட் பொய்யா எழினி – அதியமானின் தகடூரைத் தாக்கிப் போர்க்களத்திலேயே மாண்டுபோனவன்
  • கொடும்பூண் எழினி – குதிரைமலை அரசன், கடையெழு வள்ளல்களில்
  • பொலம்பூண் எழினி – தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் தோற்றோடியவன்
  • கல்லா எழினி – மத்தி அரசனால் பல் பிடுங்கப்பட்டவன்
  • கண்ணன் எழினி – தன் நாட்டைத் தாக்கிய பகைவரை ஓட்டியவன் என்று மாமூலனாரால் குறிப்பிடப்படுபவன்.
  • எழினியாதன் – குமரி மாவட்டம் வாட்டாற்றுப் பகுதியில் வாழ்ந்த சங்ககால வள்ளல். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனது வள்ளண்மையைப் பாராட்டிப் பாடியுள்ளார்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Name of a chief noted for liberality

curtain

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல – குறு 80/5,6

நன்முறையில் வெல்லும் பெரிய வேற்படையை உடைய எழினி என்பானின்
போரில் கைப்பற்றப்பட்ட பெரிய பசுக்களின் கூட்டம்போல

எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 64

திரைச்சீலையை வளைத்த இரு அறைகள்(கொண்ட) படுக்கைக்கண்ணே சென்று

கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும்/ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை - புறம் 158/9,10

போர் வல் யானை பொலம் பூண் எழினி/நார் அரி நறவின் எருமையூரன் - அகம் 36/16,17

சில் பரி குதிரை பல் வேல் எழினி/கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார் - அகம் 105/10,11

மறம் மிகு தானை கண்ணன்எழினி- அகம் 197/7

கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய - அகம் 211/13

மத்தி என்பவன் வேந்தன் ஏவியதன் பேரில் தொலைவிலுள்ள நாட்டுக்குச் சென்று கல்லா எழினி என்பவனின் பல்லைப் பிடுங்கிக் கொண்டுவந்து தன் ஊர் வெண்மணிவாயில் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான்

பொய்யா எழினி பொருது களம் சேர - புறம் 230/6

ஆடு மாடு மேய்ப்போர் அச்சமின்றிக் காட்டில் தங்கும் வகையில் இவன் குடிமக்களுக்குப் பாதுகாப்பு நல்கிவந்தான். காட்டில் தங்கும்போது விலங்குகள் தாக்காதவாறும், நாட்டிலுள்ள செல்வத்தைப் பகைவர் பறிக்காதவாறும் இவன் பாதுகாப்பு அளித்துவந்தான். இவன் அதியமானின் தகடூரைத் தாக்கியபோது போர்க்களத்திலேயே கொல்லப்பட்டான்

கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான் - புறம் 392/2

ஓவிய எழினி சூழ உடன் போக்கி - சிலப்.புகார் 6/169

பொரு முக பளிங்கின் எழினி வீழ்த்து - மணி 5/3

தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் - கம்.பால:2 4/3

இயங்கு கார் மிடைந்த கா எழினி சூழலும் - கம்.பால:19 5/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *