Skip to content

சொல் பொருள்

(வி) 1. நிற்கும் நிலைக்கு வருதல், 2. உயர், மேலெழும்பு, 2. (பெ) கணையமரம், கதவை உள்வாயிற்படியில் தடுக்கும் மரம், 3. (பெ.அ) ஏழு என்ற எண்ணின் பெயரடை

சொல் பொருள் விளக்கம்

எழு – தடை மரம். அகத்தே நுழையுங் காலத்து மேலே எழுப்பப்படுதலால் எழு என்பது பெயராயிற்று. “சீப்புள்ளுறுத்துத் திண்ணெழுப் போக்கி” என்றார் உஞ்சைக் காண்டத்தும். “எழுவுஞ் சீப்பும் முழுவிறல் கணையமும்” என்றார் இளங்கோவடிகளாரும். (15: 215) (பெருங் இலாவண. 5. 38. பெருமழை.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rise, rise up, Cross-bar of wood set to a door; adjectival form of the number seven

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எழு எனின் அவளும் ஒல்லாள் – நற் 159/8

எழுந்து வருக என்று அழைத்தால் அவளும் அதற்கு உடன்படமாட்டாள்;

வென்று எழு கொடியின் தோன்றும் – மலை 582

வென்று உயரும் கொடியைப்போலத் தோன்றும்

எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 49

கணையமரத்தைப் போன்ற திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவன்

கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – மது 427

தீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *