Skip to content

சொல் பொருள்

(வி) செல், போ

சொல் பொருள் விளக்கம்

செல், போ

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

go

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மழவர் பெருமகன் மா வள் ஓரி
கைவளம் இயைவது ஆயினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே – நற் 52/9-11

வீரர்களின் தலைவனான, மிகுந்த வள்ளண்மையுள்ள ஓரியின்
கையிற்கிடைக்கும் பெருஞ்செல்வம் கிடைக்கப்பெறினும்
அது மிகவும் எளிமையானதாகும், உன்னுடன் கூடிப்பெறும் அப் பொருள், நீயே செல்வாய் 

மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்-கொல்லோ தானே – அகம் 89/18,19

மெத்தென்றிருக்கும் சிவந்த அடி வருந்தச் செல்வதற்கு
வன்மையுடையள் ஆவாளோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *