சொல் பொருள்
ஏரான் – முதலாக வந்தவன்
சொல் பொருள் விளக்கம்
சற்றே முற்காலம்வரை திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அங்கே மாணவர்கள் ஒருவருக்கு முன்னாக ஒருவர் வந்து விடுதல் நடைமுறை. ஆசிரியர் வீட்டுத் திண்ணை அல்லது வீட்டின் பகுதியே பெரும்பாலும் பள்ளியாக இருப்பதுண்டு. ஆதலால் நேரம் காலம் என்னும் மணிக்கணக்கில்லாப் பணியாளர் அவர், முதலாவதாக வருபவன் ஏரான். அவனுக்கு மட்டும் அடியில்லை, பின்னே வர வர அடிபெருகும். ஏரான் என்பது உழவன் வழிவந்த வழக்கமாகும். முன்னேர்க்காரன் ஏரான் எனப்படுவான், இவனோ முன் வந்ததால் ஏரான். ஏரானாக வருவதற்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும். நானே ஏரான் என ஒருவன் மகிழ்வோடு வர அவனுக்கு முன்னாக வந்த ஏரான் இருமிக் காட்டுவான்! அது இருமலா, இடியன்றோ!
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்