சொல் பொருள்
ஒட்டி – ஓராற்றான் இயைந்து கூறுதல்
வெட்டி – நேர்மாறாக மறுத்து கூறுதல்.
சொல் பொருள் விளக்கம்
“ஒட்டிப் பாடவோ? வெட்டிப் பாடவோ?” என்பது புகழேந்தியார் வினா. ஒட்டக் கூத்தர் அரசவைப் புலவர்; ஆதலால் அவர்க்கு இறக்கம் வாராதிருக்க இரக்கம் கொண்ட சோழன் ‘ஒட்டிப் பாடுக’ என்றது புலவர் புனைவுச் செய்தி. ஒட்டுதலும், வெட்டுதலும் எதிரிடை என்பது வெளிப்படை தானே.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்