சொல் பொருள்
1. (வி) 1. வார், கசியச்செய், 2. நடப்பி,
2. (பெ) 1. நேரிய பகுதி, 2. (மழை) பெய்தல், 3. வரிசையாகச் செல்தல், 4. ஒழுக்கம்,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : பொருள்பிணி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
straight part, pouring (as of rain), moving in a row, discipline
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை – அகம் 247/1 கழுவாத முத்து ஆகிய கண்ணீர் ஒழுகவிடப்பெற்ற அழகிய முலையினையுடைய முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை – பதி 74/24 உணரத் தக்கவற்றை முழுதும் உணர்ந்து, பிறரையும் நன்னெறியில் ஒழுகச்செய்யும் நரை கொண்ட முதுமையான புரோகிதனை வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/16 மூங்கிலின் நேரிய பகுதியை ஒத்த வளைந்த முன்கையுடன் கூடிய பருத்த தோளின் மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507 மழை பெய்தல் இடையறாமையாலே தவறாத விளைவினையுடைய கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி எல்லை கழிந்தனெம் – நற் 159/4,5 சங்குகளைக் கொத்துக்கொத்தாக நிரைத்தாற்போன்ற குருகினங்கள் வரிசையாகச் செல்வதை எண்ணி பகற்போதைக் கழித்தோம் சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப – புறம் 173/7 மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய சாரை சாரையாகச் செல்லும் வரிசை ஒழுங்கை ஒப்ப விழு கடிப்ப அறைந்த முழு குரல் முரசம் ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப – புறம் 366/1-3 பெரிய குறுந்தடியால் அடிக்கப்பட்ட பெரு முழக்கத்தையுடைய முரசம் மற ஒழுக்கமுடைய வீரரிடத்தே சென்று அரசாணை என்ற ஒரு குறிப்பே தோன்ற பாம்பை எறியும் இடி முழங்குவது போல முழங்க – ஔ.சு.து.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்