சொல் பொருள்
(பெ) பேரொலி, ஆரவாரம்,
சொல் பொருள் விளக்கம்
பேரொலி, ஆரவாரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
loud noise
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார் விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 325-327 பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட கொடுங்குணமுள்ள யானையின் மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு, (விலங்குமொழி கலந்த)கலப்பு மொழியால் பழக்கும் பாகருடைய ஆரவாரமும்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்